வீட்டு வாடகை ஒப்பந்த சட்டத்தின் 22 சிறப்பம்சங்கள்:-
1. வாடகை ஒப்பந்தத்தை பதிவு செய்யாமல் எந்த வீட்டையும் வாடகைக்கு விட கூடாது.
2. வாடகை வீடுகளில் குடியிருப்பவர்கள் வாடகை ஒப்பந்தம் குறித்து தகவல் தெரிவித்து, உரிய பதிவு எண்ணை பெற வேண்டும்.
3. வாடகை ஒப்பந்தங்கள் 15 நாட்களுக்குள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
4. வீட்டு உரிமையாளர் வாடகைதாரர் இடையே செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் படி வாடகை நிர்ணயம் செய்யப்படும்.
5. 3 மாத வாடகையை முன்பணமாக உரிமையாளரிடம் செலுத்த வேண்டும்.
6. குறிப்பிட்ட கால வரம்புக்குள் வாடகை மற்றும் பிற கட்டணங்களை செலுத்த வேண்டும்.
7. வசூலிக்கபடும் வாடகைக்கு, கட்டாயம் ரசீது வழங்க வேண்டும்.
8. உரிமையாளர் ரசீது வழங்க மறுத்தால், வாடகையை 2 மாதங்களுக்கு அஞ்சல் பணவிடை மூலம் அனுப்பலாம்.
9. அதற்க்கு பின்னரும் ரசீது வழங்க மறுத்தால் வாடகையை உரிய வாடகை அலுவலரிடம் நேரடியாக செலுத்திவிடலாம்.
10. வாடகை மாற்றம் குறித்த விவரங்களை ஒப்பந்தம் முடிவடைவதற்க்கு முன்பே நில உரிமையாளர் தெரிவிக்க வேண்டும்.
11. வீட்டை காலி செய்ய விரும்பினால், வீட்டு உரிமையாளருக்கு குறைந்தது 1 மாதத்திற்கு முன் அறிவிப்பு கொடுக்க வேண்டும்.
12. வீட்டு உரிமையாளரின் எழுத்துப்பூர்வ அனுமதி இல்லாமல் உள் வாடகைக்கு விடக்கூடாது.
13. குடிநீர் குழாயில் ஏற்ப்படும் சிறு கோளாறுகள், மின்சார ஸ்விட்ச்சுகள் மாற்றுதல், கதவு, ஜன்னல், தாழ்பாழ் உள்ளிட்ட சிறு சிறு கோளாறுகள் வாடகைதாரர் சரி செய்து கொள்ளவேண்டும்.
14. பெயிண்ட் அடித்தல், குடிநீர் குழாய்களை மாற்றுதல் உள்ளிட்ட பெரிய கோளாறுகளை வீட்டு உரிமாயாளர்கள் சீர் செய்து கொடுக்க வேண்டும்.
15. வாடகைதாரரை உடனடியாக காலி செய்யுமாறு நெருக்கடி கொடுக்க முடியாது.
16. அதேபோல் வீட்டை காலி செய்ய உரிமையாளர் அளித்துள்ள கால வரம்புக்கு மேல் வாடகை தாரரும் குடியிருக்க முடியாது.
17. ஒத்துக்கொள்ளபட்ட பழுதுபார்ப்புகளை செய்ய வாடகைதாரர் மறுத்தால் வீட்டு உரிமையாளர் அவற்றை செய்து முடித்து அதற்கான தொகையை அட்வான்ஸ் தொகையிலிருந்து கழித்து கொள்ளலாம்.
18. அதேபோல் உரிமையாளர் ஒத்துக்கொண்ட பழுதுபார்ப்புகளை செய்யாவிட்டால் அதை வாடகைதாரர்களே செய்துகொண்டு அதற்கான தொகையை வாடகையிலிருந்து கழித்து கொள்ளலாம்.
19. வீட்டு உரிமையாளர் வீட்டை பார்வையிட விரும்பினால், வாடகைதாரரிடம் 24 மணி நேரத்திற்கு முன்பு தெரிவிக்க வேண்டும்.
20. இரவு 8 மணிக்கு மேலோ காலை 7 மணிக்கு முன்னரோ வீட்டிற்குள் நுழைய கூடாது.
21. பிரச்சனைகளை விசாரிக்க, மாவட்ட ஆட்சியர் நிலையில், அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.
22. அதிகாரியின் உத்தரவு ஏர்க்கத்தக்கதாக இல்லாவிடில், வாடகை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்.
அரசு நிறுவனங்கள், இந்து சமய அறநிலையத்துறை, வகுப்பு வாரிய சட்டத்தில் பதிவு செய்யப்பட்ட சொத்துக்கள் இச்சட்ட வரம்புக்குள் வராது என்பது குறிப்பிட தக்கது.
Reference: https://www.tenancy.tn.gov.in/
Related FAQ’s & Comments